பக்கம் எண் :

195

10000, 5000, 2000, 1000 என்ற முறையில் சம்பளம் வாங்குகிறவர்கள் 10, 20 சம்பளம் வாங்கும் ஏழை உத்தியோகஸ்தர் விஷயத்தில் காட்டிய மனப்பான்மை மாறுபடத் துவங்கி இருக்கிறது. பெரிய சம்பளக்காரர்கள் ஏழை மக்களை ஒடுக்கி வருவதற்காக நமக்கு இத்தனை சம்பளம் கொடுக்கப்படுகிறதல்லவா என்று உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ஏழைகளும் அந்த அதிகப் படியான சம்பளத்தைக் கோணற்பார்வை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மடாதிபதிகளின் அட்டகாசம் ஏழைகள் கண்ணை உறுத்த ஆரம்பித்துவிட்டது. மடாதிபதிகளும் அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்று சுப்பிரமணியர் துதி ஆரம்பித்திருக்கிறார்கள். பெரிய மிராசுதாரர்களின் குமுறல்களைக் கொண்டே படிக்கத் தெரியாத உழவர்கள் விஷயம் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். நாள் முழுதும் உழைக்கும் நமக்குக் கூலி ஆறணாவாம்; சோம்பேறி மிராசுதாரர்களுக்கு மார்பில் சந்தனமாம் என்பன போன்ற உத்வேகமான சண்டமாருதம் தலை காட்டிவிட்டது. ‘இந்த நிலையில் சுயராஜ்யம் வந்தால் அது பணக்காரர்களுக்கும் புரோகிதக் கூட்டத்தார்களுக்கும் மடாதிபதிகளுக்கும் ஜமீன்தார்களுக்கும் நல்லதே தவிர, ஏழை மக்கள் என்ற பெரும்பான்மையோர் நிலையில் எள்ளத்தனை மாறுதலும் இராது’ என்பது ஜனங்களுக்குத் தெரிந்தே வருகிறது. இதன் உண்மை சமீபத் தேர்தல் சமயத்தில் தெரியத்தான் போகிறது.

வட்டியில்லாமலும் ஏழைகட்கு எள்ளின் மூக்கத்தனைப் பயனில்லாமலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்கள் கோயில் பேராலும் குருக்கள் பேராலும் மதத்தின் பேராலும் வீணாய்க் கிடக்கின்றனவாமே! அடடா, அந்தப் பணங்கள் எல்லாம் இருந்தால் ஏழை மக்களே இல்லாமல் எல்லாரும் உண்ண உணவுக்கும் உடுக்க ஆடைக்கும் ஒண்டக் குடிசைக்கும் கஷ்டமின்றி வாழலாமே! மெய்தானடா அண்ணே! சுயமரியாதைக்காரர் சொல்லுவது