பக்கம் எண் :

198

தங்களில் கொழுத்த ஆட்களைப் பிடித்து அரசன் என்றும் படைவீரர் என்றும் ஒரு கூட்டத்தை உண்டாக்கி அந்தக் கூட்டத்துக்கு ஆயுதமும் கொடுத்து, அரசாட்சி என்பதன் பேரால் ஏழை மக்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொண்டார்கள்.

இதன் பிறகாவது முதலாளிவர்க்கத்திற்கு மன அமைதி ஏற்பட்டதா? இல்லை. ஏன்? நாம் ஏற்படுத்திய அரசர்கள் ஆள வேண்டும். நாடு பிடிக்க வேண்டும் என்ற பைத்தியத்தால், வெறி நாய்கள்போல சதா சண்டையிடலானார்கள். இந்தச் சண்டைகளால் தொழிலாளர்கட்கு கிராக்கி ஏற்பட்டது. சிறிது மதிப்பு ஏற்பட்டது. ஏன்? படைக்கு ஆள் வேண்டும், தொழிலுக்கு ஆள்வேண்டும். ஆகையால் இந்த அரசர்களால் நமது ஆத்திக ஏமாற்றுக்கள் முழுதும் காக்கப்படுமா? என்று பணக்காரர்களாகிய - சோம்பேறிகளாகிய தம்பிரான்கள் பயந்தார்கள். இதனால் அவர்கள் என்ன முடிவுக்கு வந்தார்களென்றால் பெரும்பாலான தொழிலாளர்களை நாம் தேகபலத்தால் முழுதும் அடக்கிவிட நினைப்பது முடியாத காரியம். ஆதலால் இவர்கள் மூளையில் முட்டாள்தனத்தையும் கண்ணில் மிளகாய்த் தூளையும், தூர்த்துவிட்டால் சாஸ்வதமாக நாம் ஏழை மக்கள் உழைப்பால் வயிறு வளர்க்கலாம் என்று முடிவு கட்டினார்கள்.

பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மத்தின் பலன்தான் நீங்கள் ஏழையாக இருப்பது என்றும், அந்த ஏழ்மையை அனுபவித்துத்தான் ஆக வேண்டுமென்றும் பொதுமக்கள்பால் கரடிவிட ஆரம்பித்தார்கள். இந்த ஜென்மத்தில் ஏழையாக இருந்தாலும் பாதகமில்லை. மிச்சமீதியைக் கொண்டு பூணுல் திருடர், சடைமுடித் திருடர், கோயில் திருடர், அரசாங்கத் திருடர்களுக்குப் பூசை போட்டு வந்தால் அடுத்த ஜென்மத்தில் குளுகுளு என்று வாழலாம் என்பன போன்ற கயிறுகளைத் திரிக்க ஆரம்பித்தார்கள். இந்தக் காலத்தில்தான் பிரம்மா திடீரென்று