சென்ற நூற்றாண்டில்தான் இந்த ஏமாந்தவர்! மேலும் ஏமாற்றுகிறவர்! ஆதிக்கம் செலுத்த மூன்றாவது வர்ணம் இந்தியாவில் குதித்தது. இதனால் தமிழர் தம் நிலையை அறிய சிறிது வெளிச்சமும், தமிழரின் எதிரிகட்குத் தமது தந்திர சூழ்ச்சிகட்குத் தக்க லாபமும் ஏற்படலாயின. இப்போது தமிழர் அத்தனை மோசம் இல்லை. காதைப் பிடித்துத் தூக்கினாலும், இப்போது தமிழன் தன் சகிப்புத் தன்மையை விட்டுக் கீ என்று கத்துகிறான். தமிழரின் எதிரிகள் இப்போது ஒரு தப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் நினைப்பு:- அரச வணக்கம், அதிகாரி வணக்கம், பயம், சுயநலம் இவைகள் இன்றைக்கும் தமிழனின் நிரந்தரச் சொத்து. அந்தக் காலத்தில் தமிழரின் தமிழ்க் கலைகளையெல்லாம் மாய்த்து அவைகளைக் கடல் கொண்டு போனதாகத் தமிழர்களைக் கொண்டே சொல்லி வைக்க அதை நம்பினார்கள். தமிழச்சி ஒருத்தியைச் சரிப்படுத்திக் கொண்டு 8000 தமிழர்களை நமது மூதாதைகள் படுகொலை செய்து முன்னேறவில்லையா? தமிழைப் புகழ்வதன் மூலம் தமிழர் தலைகளைப் பலியேற்க நினைத்ததில் இன்றுவரை வெற்றி! தேசத்தை அயலானிடம் காட்டிக் கொடுத்ததிலும், அதனால் சிறுபான்மையோராகிய நாம், சுகபோகத்தைக் காத்துக் கொண்டதிலும் வெற்றிமேல் வெற்றி! சில ஆண்டுகளாகக்கூட தமிழர்களுக்குத் தைத்த குல்லாய்களுக்குத் தமிழர் மூக்கைப் பிடித்துக் கொண்டுதானே தலை தாழ்த்தினார்கள். காசை பிடுங்கிக்கொண்டு காற்செருப்பைக் காட்டும் ஆளுக்கு எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் |