என்று சொல்லும் இருட்டில்தானே தமிழர் குடித்தனம் பண்ணுகிறார்கள்! வந்தால் அரச போகம்! இல்லாவிடில் சென்னைக் கந்தசாமி கோயில் வீதியில் மூன்றணாவுக்கொரு பித்தளை செம்பு! பார்ப்போமே ஒரு கை?  எதிரிகளின் இந்தச் சிந்தனைகள், காலந் தவறியைவை என்பதே எனது அபிப்பிராயம்.  தமிழரை வஞ்சித்து வஞ்சித்து, அவர்களின் ஒற்றுமையைக் கலைத்துக் கலைத்து, நலி செய்து நலி செய்து பழகிய அந்த எதிரிகள் இன்று தமிழரின் மண்டையை நோக்கி ஓச்சிய கோட்டடிதான் ஹிந்திக் கட்டாயப் படிப்பு! அநேகமாக இன்று தமிழரால் ஓர் புரட்சி ஏற்படலாம். நலிந்த ஒரு தனி மனிதன் செத்துப்போவான்.  ஆனால் நலிந்த ஒரு ஜாதி சாகா எழுச்சியுறும். இது இயற்கைச் சட்டம்! எனது இன்பக் கனவு.  குடி அரசு, பக். 17, 10-10-1937 *  |