பக்கம் எண் :

204

47
பிள்ளை பெறுவது கடவுளாலா?


‘கடவுள் சிருஷ்டிக்கிறார் எல்லாவற்றையும், எல்லாம் எப்போதும் கடவுளால் சிருஷ்டிக்கப்படுகின்றன’ என்கிறாய் தோழா! உன் வீட்டில் நேற்றுப் பிறந்த குழந்தையையும் அவர்தாம் சிருஷ்டித்தார். எவை உன் கண், காது முதலியவற்றிற்குப் புலனாகி விட்டனவோ அவைகளெல்லாம் ‘கடவுள் சிருஷ்டி’ என்று கண்ணை மூடிக்கொண்டு எழுதி விடலாம். ஆனால் நீ ஒரு விஷயத்தில் தவறிவிடாதே! ஒன்று தோன்றிய பின்புதான் அது ‘கடவுள் சிருஷ்டி’ !தோன்றாத முன்பு அது தோன்றுவதற்கு முன்னறிவிப்பு, கடவுள் சிருஷ்டியில் இல்லை. தோற்றுவிக்குமுன் தெரிவிக்க வேண்டியது கடவுள் பொறுப்பாய் இருந்தால், அதைத் தோற்றுவிக்கக் காரணத்தைச் சொல்ல வேண்டிய பொறுப்பு கடவுளுக்கு ஏற்பட்டு விடும். அதன் பிறகு கடவுள் ஏற்பாட்டின் குட்டு வெளிவந்துவிடக் கூடுமல்லவா?

உன் வீட்டில் பிறந்த குழந்தை கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்று மேலே சொன்னேனல்லவா? நீயும் ‘ஆம்’ என்று நம்பினாய்.

ஆகவே உன் வீட்டில் பிரசவ அறையில் கடவுளால் ஒரு குழந்தை சிருஷ்டிக்கப்பட்டதல்லவா? முதன் முதல் உன் வீட்டில் பிரசவ அறையில் உன் குழந்தையைக் கண்டாய், அதை உன் மனைவியின் அண்டையில் தான் பார்த்தாய். அப் பிள்ளையை ஈன்றவள் யார் என்பதை நீயறிவாய். அவள் அதை ஈன்றெடுக்க உனது சம்