பக்கம் எண் :

206

படுவதும் ஞாயம்! ஆனால் ‘கடவுள் தந்தார் இந்தப் பிள்ளையை’ என்று அறியாததான ஒரு கடவுளைப் பற்றிக் கூறுவதால் கோபமில்லை; நீ அதைமறுக்க முற்பட வேண்டியதில்லை. ஏன்! கடவுள் என்பது க-ட-வு-ள் என்பது மாத்திரமே உனக்குத் தெரியும். ஒரே ஒரு வார்த்தை! எதையும் படைத்த கடவுள், மக்களைப் படைத்த கடவுள், உன் பிள்ளையைப் படைத்த கடவுள், சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சகலத்தையும் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கும் கடவுள் இருக்கிறாரல்லவா? அவர், நீயும், உனது மனைவியும் சம்பந்தமற்றிருக்கும் காலத்தினிடையில் உன் வீட்டுப் பிரசவ அறையில் ஒரு பிள்ளையைச் சிருஷ்டித்துப் போட்டு விடுவாரேயானால் அதே நேரத்தில் என்னைக் கூப்பிடு; அப்போதுதான் ‘கடவுள் சிருஷ்டியா’ என்ற தொடர் மொழிக்கு அர்த்தம். கடவுள் மனிதரின் சிருஷ்டியா? மனிதன் கடவுளின் சிருஷ்டியா? என்ற இரண்டிலொன்றை நான் நிச்சயித்துவிட உத்தேசம்.

பகுத்தறிவு, மார்ச், 1970

மலர்-1; இதழ் - 3.

*