பக்கம் எண் :

210

வழக்கத்தில் வருவது முடியாது என்று கூறலாம். வழக்கத்தில் வருவது இலேசு என்று தோன்றுகிறது.

அஃது - பெரிது - ஆயினும் - எளிது என்பதை அஃத்உ - ப்எர்இத்உ - ஆய்இன்உம் - எளிஇத்உ என்று எழுதுக. சில நாட்கள் தொல்லையாக இருக்கும். பிறகு எளிதாகிவிடும்.

இங்கிலீஷிலும் பிரஞ்சிலும் இப்படித்தானே. பு என்பதை இங்கிலிஷில் Pu என்றுதானே போடுகிறான். பிரஞ்சிலோ அவளப்பன்! Pou என்று மூன்று எழுத்துக்கள் போடவேண்டும்.

எழுத்துச் சிக்கனம் (2)

உயிர் 12, மெய் 18, ஆய்தம்1. ஆக 31 எழுத்தைக் கொண்டே எழுத்துக் குடித்தனத்தைச் சிக்கனப்படுத்தலாம் என்று கூறினோம்.

ஒரு தோழர் தெரிவிக்கிறார். ‘நீங்கள் சொல்லிய வழி ஏற்றது. அதனோடு, ஆ என்பதை அா என்றும் ஈ என்பதை இா என்றும் ... சுருக்கலாம்’ என்கிறார். செய்யலாம் என்கிறோம் அப்படியே.

அதன்படி,

‘ஈவது விலக்கேல்’ என்பதை இாவ்அத்உ வ்இல்அக்க் எால் என்று எழுதுக.

குயில், 15-5-48, 15-6-48

*