50 அடி: நொறுக்கி விடு
இரண்டு வயதுள்ள குழந்தை. எழுந்தால் விழும்; விழுந்தால் அழும். அக் குழந்தை அப்பா ஏதாகிலும் வாங்கி வருவார் என்று பார்த்திருக்கிறது. அப்பா வரவில்லை. குழந்தைக்கு மனசில் வருத்தம். எரிச்சல்! அப்பா வந்துவிட்டார். ஒன்றும் வாங்கிவரவில்லை. குழந்தை தன் அப்பாவின் காலைப் பற்றிக்கொண்டே எழுகிறது. தன் இரண்டு கைகளாலும் அப்பாவின் துடையைப் பிடித்துக் கொள்கிறது. தன் காலால் அப்பாவை உதைக்கிறது. திராவிடனே! இன்று உன்னை உதைக்க நினைப்பவன் உன் குழந்தையல்ல; உன் காலைப் பற்றிக் கொண்டே உன்னை உதைக்க நினைக்கிறான். அடி! நொறுக்கிவிடு, அவனை! * |