பக்கம் எண் :

212

51
குள்ள நரியின் குதிப்புக்கு மறுப்பு


‘பார்ப்பனர் அல்லாதவர் அனைவரும் திராவிடர் என்பது சரியல்ல.’ - இது முற்போக்குப் பார்ப்பனர் மாநாட்டில் முற்போக்குப் பார்ப்பனர் சொன்னது. இதற்குக் காரணமும் கூறினார்கள். அந்தக் காரணம் என்னவெனில், “இப்போதும் பார்க்கலாம் பம்பாயில் சில பார்ப்பனக் குடும்பங்கள் தம்மைத் திராவிடர் என்றே கூறிக் கொள்வதை” காரணம் சொல்லிவிட்டார்கள். பார்ப்பனர் அல்லாதவர் திராவிடர் அல்ல எனில் வேறு எவர்? - கூறவில்லை. இருக்கட்டும். பார்ப்பனர் எவர் என்பதையாவது பார்ப்பனர் மாநாடு கூறியதா? கூறவில்லை. பம்பாயில் சில குடும்பங்களைப் பற்றி நாமும் கேள்விப்பட்டதுண்டு. ஆம், அவர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். சொல்லிக் கொள்ளுகிறார்களே தவிர பார்ப்பனீயத்தைச் சேர்ந்தவர்தான் மேற்கொண்டு வாழ்கிறார்கள்.

ஏன் வடநாட்டில் தம்மைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள் பார்ப்பனர்?

முன்னாளிலும் பம்பாயில் திராவிடர் என்றால் வீரர் என்பது கருத்து. தர்ப்பைகளுக்கு வீரர் பட்டம் சுலபமாகக் கிடைப்பதை ஏன் விடவேண்டும். தென்னாட்டை விட்டுப் பிழைக்கப்போன இடத்தில் ஒரு பேச்சு - நாங்கள் திராவிடர் -