பக்கம் எண் :

214

பார்ப்பனர் என்று சொல்ல முடியாமலும் திராவிடர் என்று சொல்ல முடியாமலும் ஏதுங்கெட்ட நிலையில் ஒரு கூட்டம் இந்நாட்டில் உண்டு என்பதைத் திராவிடர் கழகம் உணர்ந்திருக்கிறது.

பார்ப்பனர் என்பவர் உலகின் நன்மையைப் பார்ப்பவர் என்று கூறுகிறார்கள். உலகின் நன்மையைப் பார்ப்பதைவிட்டு தன்னலத்தையே பார்க்கும் கூட்டம் இருக்கிறதல்லவா - அது திராவிடர் கூட்டமன்று; பார்ப்பனர் கூட்டமும் அன்று.

வேதமுணர்ந்தவன் பார்ப்பான் என்கிறார்கள். பார்ப்பனர் என்று கூறிக்கொண்டு வேதமும் தெரியாத கூட்டம் ஒன்று இருக்கிறதல்லவா? அது திராவிடர் கூட்டமுமில்லை. பார்ப்புக் கூட்டமுமில்லை.

பிழையாக வேதம் ஓதும் பார்ப்பானைவிடச் சிரைப்பவன் மேல் என்கிறார்கள். பார்ப்பனர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டு பிழையாக வேதம் ஓதும் கூட்டமும் இருக்கிறதல்லவா? அது தி.கூட்டமும் அல்ல; பா கூட்டமுமல்ல.

தொழில் விவசாயம் முதலிய துறைகளில்காலை வைப்பவன் பார்ப்பானில்லை என்கிறார்கள். கருவாடு ஏற்றுமதி செய்து கொண்டே தம்மைப் பார்ப்பனர் என்று கூறும் கூட்டமும் இருக்கிறது. அது தி. கூட்டமுமல்ல; பா. கூட்டமுமல்ல.

இந்த ஏதுங்கெட்ட கூட்டத்தின் ஏய்ப்பு நிலைமையை எதிர்த்து மீள்வதுதானே திராவிடரின் பெரிய வேலையாயிருக்கிறது. மற்றபடி திராவிடர் என ஓர் இனம் இருப்பதைச் சில மடப்பயல்கள்போல இந்த முற்போக்குப் பார்ப்பனர் மறுக்கவில்லை. அந்த மட்டும் மகிழ்ச்சி.

இன்னொரு மகிழ்ச்சி. நேரே வெளிவந்து விட்டார்கள் முற்போக்குப் பார்ப்பனர். திராவிடர்மேல் நேரடி