நடவடிக்கை தொடங்க வேண்டியதுதான் பாக்கி. தொடங்குவோம் என்றுகூடக் குறிப்புக் காட்டியிருக்கிறார்கள். முற்போக்குப் பார்ப்பனரிடம் நமக்கு இன்னொரு மகிழ்ச்சி. இத்தனை நாள் நாங்கள் செய்தது குள்ள நரி வேலை. நல்ல அலுவல்களை அடைந்து கொண்டோம். செல்வ நிலை பெற்றுள்ளோம். இனி எங்கள் முகவரியைக் கூறிக் கொண்டே எதிர்ப்போம் என்கிறார்கள். திராவிடர் கழகம் சொல்லுகிறது; ‘உன்னால் ஆனதைப் பார். பறிக்க முடிந்தால் பறி. ஏமாற்ற முடிந்தால் ஏமாற்று. தர்ப்பைக் கையில் கத்தியைத் தூக்க முடிந்தால் தூக்கு. செய்ய முடிந்தால் செய்.’ குயில், 15-5-1948 * |