பக்கம் எண் :

217

நண்பர் முடிவு தீய விளைவுக்குரியது. புறாப்பண்ணையை விட்டுக் கழுகு நகரவில்லையானால் கழுகு புறாவாகி விடாது.

இனி, தமிழருக்குரிய அடிப்படை ஒழுகலாறுகள், வாழ்க்கையில் இயற்கையாய் அமையப் பெற்றவன் தமிழன். தமிழரின் ஒழுகலாறுகளில் சில வருமாறு:-

ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பது தமிழர் ஒழுக்கம்.

திருமகன் அருளப் பெற்றுத்
திருநிலத் துறையும் மாந்தர்
ஒருவனுக்கு ஒருத்தி போல
உளமகிழ்ந்து ஒளியின் வைகிப்
பருவரு பகையும் நோயும்
பசியும் கெட்டொழிய, இப்பால்
பெருவிறல் வேந்தர் வேந்தற்கு
உற்றது பேசலுற்றான்.

- சீவக சிந்தாமணி - 2377

என்ற செய்யுளில், ‘ஒருவனுக்கு ஒருத்திபோல உள மகிழ்ந்து’ என்ற தொடரை நோக்குக! ஒருத்தி ஒருவனையே மணக்க வேண்டும் என்பது பெறப்படுகின்றது. ஒருத்தி ஆடவர் பலரை மணப்பதும் உலகில் உண்டோ என்று கேட்கலாம். உலகில் என்ன? தமிழ்நாட்டிலேயே கோயில் கொண்டெழுந்தருளியுள்ள திரௌபதி எப்படி? அவள் ஐவரை மணந்தவள். அதனால் பெரும் பழிப்பை ஏற்றவர் அல்லரோ ஐவர். அதனாலன்றோ,

படுபழி மறைக்கல் ஆமோ
பஞ்சர் அன்று பெற்ற
வடுஉரை யாவர் பேர்ப்பார்?
வாய்ப்பறை யறைந்து தூற்றி