இடுவதே யன்றிப் பின்னும் இழுக்குடைத் தம்ம காமம் நடுவுநின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான்.
எனச் சிந்தாமணியும் ஐவர் ஒருத்தியை மணந்ததைச் சிரித்தது. இனி, ஒரு தீயசெயல் செய்துவிட்டுப் பின் அதற்குக் கழுவாய் தேடும் தீயொழுக்கம் தமிழர்பால் இல்லை. இதனால் அன்றோ திருவள்ளுவர், “எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று” என்று கழுவாய் முறையை இகழ்ந்துரைத்தார். இனி, பிறவியில் உயர்வு தாழ்வில்லை; மக்கள் நிகர் என்று ஒழுகுவது தமிழர் ஒழுக்கம். “பிறப்பு ஒக்கும், எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால்” என்ற திருக்குறளை நோக்குக. பிறவியில் உயர்வு தாழ்வு பேசுவது ஆரியர் ஒழுக்கம். “நால்வகைச் சாதி இந் நாட்டினில் நாட்டினீர்.”
என்று கபிலர் ஆரியர் கொள்கையை இழித்துரைப்பதும் நோக்கத்தக்கது. “அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”
என்ற வள்ளுவர் வாய்மொழி காண்க! தீய வழியில் ஒன்றைத் தேடியடைதல் தமிழர்பால் இல்லை. இதனால், |