இன்றி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருப விடல். என்றார் வள்ளுவரும். ‘தொல்லை நேர்ந்துழி அல்ல புரியலாம்’ என்று மறு நூல் கருதுகின்றதும் கருதத்தக்கது. இங்குக் காட்டிய தமிழரின் ஒழுகலாறுகளில் சிலவற்றை இந்நாள் தமிழர் கைவிட்டும் இருக்கலாம். ஆயினும் கைவிட்டவர்கள் வழுக்கி விழுந்தவர்களே யன்றி அவர்களின் உள்ளத்தின் இயற்கை நிலையினின்றும் மாறினவர் அல்லர். எனவே, ‘தமிழன் யார்? ’ என்பதற்கு விடை கீழ்வருமாறு:- தமிழ்நாடு, தாய்நாடு, தமிழே தாய்மொழி, தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம். என்னும் இம் மூவகைப் பேறும் பெற்றவன் தமிழன்; மற்றவன் பிறனே! குயில், 1-6-1958 * |