பக்கம் எண் :

222

54
இரா. சிரி. தேசிகன் சிறுமதி


தேசிகன், சுசாதிமித்திரன் தீபாவளி மலரில் “தமிழில் ஆங்கிலச் சாயை” என்ற தலைப்புடன், ‘செய்ந்நன்றி கொன்றவன்’ என்ற சொற்றொடரை வள்ளுவர் தருகின்றார். இது க்ருதக்னன் என்ற வடமொழித் தொடரின் மொழிபெயர்ப்பைத் தவிர வேறில்லை’ என்று எழுதியுள்ளதாக நண்பர் கழுதூர்த் திருநாவுக்கரசு நமக்கு எழுதி, இதற்குக் குயிலின் பதிலென்ன என்றும் கேட்டிருக்கின்றார்.

தமிழர் செய்த நன்றியைக் கொன்றே இன்று வரைக்கும் தின்று கொழுப்பாராகிய ஆரியரின் நூல்களில், நன்றிகொல்வதென்னும் பொருளுடைய ஒரு தொடரைத் தேசிகன் கண்டால், அது, நன்றி செய்து நன்றி செயப்பட்டாரால் கொன்றன்ன, இன்னா அடைந்தாரான தமிழரின் தமிழ்நூற் சொற்றொடரின் வடமொழி ஆக்கம் எனக் கருதி அமைவுற வேண்டும்.

அன்றியும்,

என்றுமுள தென்றமிழின் தொன்று தொட்டுவரும் பாத்திரத்தையும் பாவேந்தர் நாத்திறத்தையும் நன்றாய்ந்து குன்றாச் சுவையுணர்வைக் கொள்ள வேண்டும். தேசிகன் சிறுமதி. அதை இன்றேனும் எய்துமா?

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை’ என்று எடுத்தார் வள்ளுவர். அவ்வடியின் முதற்சீர் தனக்கோர் எதுகை வேண்டிற்றன்றோ! ‘செய்ந்நன்றி