கொன்ற மகற்கு’ என்று முடித்தார். கவிஞரின் பண்பட்ட உள்ளமாகின்ற அச்சில் பதிந்து வெளிவரும் பாட்டுத் திறத்தின் இயல்பு நுனித்து நோக்குறுதல் வேண்டும். ‘செய்ந்நன்றி கொன்ற மகன்’ என்றது கவிஞரின் உள்ளத்தினின்று எழும் இயற்கைத் தேனருவியின் தெறிப்பு. அது வள்ளுவரின் படைப்பு. அந்தத் தேனருவியை நோக்கி, “நீ வடநாட்டு ஆற்றினின்று ஒரு செம்பு நீர் கொண்டு வந்தாயா” என்று கேட்டது நகைப்புக்கே இடமாகும். அன்றியும், ‘சமஸ்கிருதம் எனின் சேர்த்துப் பொறுக்கிச் செம்மைப் படுத்தப்பட்டது’ என்பது பொருள். உண்மை இவ்வாறாகத், தமிழ்ப் பெருநூற்களில் காணப்படும் அரிய தமிழ்ச் சொற்றொடர்க் கருத்துக்களைத் தேசிகன்கள், வடமொழியின் நூற்களில் காணின், இவை தமிழினின்று வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்டவை என்று கொள்வதே அறிவுடைமையாகும். குயில், 23-12-58 * |