55 மிக்க சலுகைக்குத் தக்கபயன் கிடைத்தது
சென்ற பொதுத் தேர்தலில் உறுப்பினரை நிறுத்தும் வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். தேர்ச்சி பெற்ற சட்டமன்ற உறுப்பினரில் அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். காமராசர் ஆட்சி உறுதிபெற வேண்டும் என்று அல்லும் பகலும் உழைத்த தமிழர் தலைவரையும், தமிழ்ப்பெருமக்களையும் கேலி செய்து கேடு சூழ்ந்து வந்த அமைச்சர்கள் சுப்பிரமணியனையும் பக்தவத்சலத்தையும் விட்டு வைத்த வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். இங்குப் பார்ப்பனரின் கோரிக்கையை எண்ணித் தமிழர் தலைவரையும் தமிழ்ப்பெரு மக்களையும் ஒழித்துக் கட்டும்படி சாடை காட்டிய நேருவை மகிழ்ச்சி செய்யும் வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். கேட்டாலும் கிழித்தாலும் சரி. இந்த நகர சபைத் தேர்தலில் உதவி செய்யும்படி தமிழர் தலைவரை நாம் கேட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறிய மடப்பசங்கள் முகத்தில் காரியுமிழாமல் அவர்களை மகிழ்வித்த வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். எல்லாத் துறையிலேயும் தமிழர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு, அதன்படி செய்து வரும் நேருவைச் சிறிது திருத்தாமல் அவரை மகிழ்வித்த |