வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். இவ்வளவு சலுகை காட்டிய முதல்வர் காமராசருக்கு, பார்ப்பனர் என்ன சலுகை காட்டினார்கள்! சலுகை காட்ட வேண்டாம்; கலகம் வளர்க்காமலாவது இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. ஒவ்வொரு பார்ப்பனனும் ஒவ்வொரு பார்ப்பனத்தியும் வரிந்து கட்டிக்கொண்டு முதல்வர் காமராசர் ஆட்சி ஒழிந்து போக வேண்டும் என்பதற்காக, அவரின் எதிர்க்கட்சியாகிய பார்ப்பானுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக உறுதியளித்த கண்ணீர்த் துளிகளுக்கே தம் வாக்குச் சீட்டைப் போட்டார்கள்; மற்றவர்களையும் போடும்படி தம்மிடத்தில் உள்ள அதிகாரத்தை மேற்கொண்டார்கள். இன்றைய நிலையில் ஒரு பார்ப்பானிடம், நூற்றுக்கணக்கான தமிழர்களின் குடுமி அகப்பட்டிருப்பதை எவனால் மறுக்க முடியும்? பிச்சை எடுத்துக்கொண்டு வந்த பார்ப்பனப் பசங்களிடமெல்லாம் இன்று அதிகாரம், அலுவல் திணிக்கப்பட்டிருக்கவில்லையா? முதல்வர் காமராசர் இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டும். குயில், 28-4-59 * |