பக்கம் எண் :

23

நடப்பது இப்படி அன்று; அறிவற்ற பெண் அவள். பருவமடைந்ததும் வீடு அவளுக்கு சிறைச்சாலை. தன் நினைப்பை எவரிடத்தும் சொல்லுவதில்லை. காதற் கனவுகள் தோன்றிய நெஞ்சிலேயே மறைய வேண்டும். இந்த நிலையில் பெற்றோர்கள் அவளுக்கு நகை போடுவதாலும் பலகாரம் செய்து கொடுப்பதாலும் அவள் திருப்தி அடைந்து விட்டதாக முட்டாள்தனமாக நினைக்கிறார்கள். அப்போதும் அவள் சின்னஞ்சிறு பெண் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தாய் அறிந்திருந்தும் அவள் அறியாததுபோல் இருந்து வருவதுண்டு.

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தே என்பதையும் மெய் என்று நினைப்பதில்லை. பிறகு மாப்பிள்ளை வீட்டுக்காரர் வீடு தேடி வந்தால் கலியாணப் பேச்சு நடக்கும். பெண்ணின் தகப்பனுக்கு சந்தர்ப்பத்திற்குத் தகுந்த மாப்பிள்ளை அமைவது மெய். அழகற்றவனை அழகன் என்றும், அறிவற்றவனை அறிவுடையவன் என்றும் தீயவனை நல்லவன் என்றும் பெற்றோர் சந்தர்ப்பமானது நிச்சயிக்க வைப்பதுண்டு. கலியாண அத்தியாயத்தில் பெண்ணிடம் மாப்பிள்ளையைக் காட்டுவதென்பதே கிடையாது. நாகரிகம் பழுத்தவர்களாய்த் தம்மை நினைத்திருப்பவர்கள் மாப்பிள்ளை ஒருவனை ஜாடையாகப் பெண்ணுக்குக் காட்டி, ‘எந்த மாப்பிள்ளை தேவை? உன் இஷ்டம் எப்படி?’ என்று கேட்பதும் உண்டு. பெண்ணிடம் காட்டப்பட்டவன் ஒருவன் தானே! அதில் அவள் பொறுக்கி எடுப்பது எப்படியோ! எல்லாக் கஷ்டத்தையும் அவள் விழுங்கிக் கொண்டு அவள் நாணி நகைப்பாள். பிறகு கூலி பார்ப்பனன் கலியாணம் முடிப்பான். குடும்பம் நடக்க ஆரம்பிக்கும். ஒன்று ஒருபுறம் நடக்கும்; மற்றொன்று மூலை வாரும்.

சில சமயங்களில் பெண்ணுக்குத் தக்க பிரியமுள்ள மாப்பிள்ளையும் அமைவதுண்டு. மாப்பிள்ளையின் தந்தை காசு மாலை போடாத காரணத்தால் அந்த மாப்