பக்கம் எண் :

24

பிள்ளை தவறி விடவும் கூடும். பின் காசுமாலை போடும் முட்டாளுக்குப் பெண் முடியும்.

தான் பெற்றெடுத்த பெண்ணை - தன் வண்டியை இழுக்கும் மாட்டுக்கோ தன்னைச் சுமக்கும் குதிரைக்கோ மனிதன்போல் இருப்பதால் ஓர் குரங்கிற்கோ தகப்பன் கலியாணம் செய்து கொடுப்பதில்லையே! தவிர பொருந்தா மணம் திருந்தாத நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது.

இந்நிலையை கவனிக்கும்போது பெண்களுக்கு இந்நாடு புண்ணிய பூமி என்பதில் தடையில்லை. பின்னென்ன? ஒரு பெண்ணை எவனிடம் ஒப்பித்தாலும் அவனிடம் அவள் அடங்கிச் சீக்கிரம் ப்ராணத்பாகும் செய்கிறாள். அது புண்ணியந்தானே.

இனி ஆறு மனைவியிடம் இன்பம் அனுபவித்த ஒரு புருஷன், அந்த ஆறாவது மனைவியை இழந்து ஏழாவது கலியாணத்திற்குப் பெண் தேடுவான்; அவனுக்கு ஒரு கணவனிடம் இன்பம் அனுபவித்த பெண்ணையோ அதுவும் அனுபவியாத பால்ய விதவையையோ மணம் செய்து கொடுக்க இச்சமூகச் சட்டம் இடங்கொடுக்கவில்லை. சாகுமட்டும் மனிதனுக்கு பெண்ணின்பம் வேண்டும். பருவமடைந்ததும் புருஷனை இழந்த புதுப்பெண்ணுக்கோ புருஷ இன்பம் தேவையிராதா? இந்த பாரத தேசத்தில்தான் தருமம் நான்கு பாதத்தில் நடந்து கொண்டேயிருக்கிறது. கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்துகொடுத்துக் கண்ணாரக் கண்டு களிக்கும் பெற்றோர்கள் வாழும் தேசத்தில் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்பது வாழத் தெரியாத இந்தியன் கருத்து.

“எத்தனை பேர்..........”

“எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்” என்னும் இவ்வரிகள் பட்டினத்தடிகள் என்பவர் சொல்லியது. இதைக் கொண்டாடுகிறார்கள். இப்பாட்டின் கருத்தின்படி உலகப்