பக்கம் எண் :

230

57
பாருங்கள் அவர்களை


இந்தியப் பண்பாட்டிற்கும் ஆத்ம வளர்ச்சிக்கும் பாதுகாவலாக இருப்பது சமஸ்கிருத மொழி ஒன்றே.

உலகத்தின் உயர்தனிச் செம்மொழியாகவும் இந்தியப் பண்பாட்டினை உண்மை உணர்ந்து கொள்ளுவதற்கேற்ற திறவு கோலாய் உள்ளதும் சமஸ்கிருத மொழியாகும்.

இவ்வாறு அவர்கள் உறுதியெடுத்துக் கொள்கின்றார்கள்.

இவர்களின் உயர்தனிச் செம்மொழிக்கு உள்ள பெயரைப் பாருங்கள். “சமஸ்கிருதம்” என்றால் என்ன பொருள்? திருத்தி அமைத்தது என்பது.

ஆத்ம வளர்ச்சி சமஸ்கிருதத்தில்தான் இருக்கின்றதாம். சூதாடுவது பெருமை என்று எது கூறுகின்றது? ஒரு பெண்ணைப் பார்த்து புணர்வது தக்கது என்று எது சொல்லுகின்றது? கட்குடியை மெச்சுகிறது எது? கொலை வேள்வியைக் கூறி மகிழ்வது எது? கழுவாய் என்னும் கயமைச் செயலை உயிர் என்று கொள்ளவேண்டும் என்று கூறுவது எது? மக்களின் உயர்வு தாழ்வு கூறி மடமை வளர்ப்பது எது? தீமை வந்துற்றபோது திருடலாம் என்று செப்புவது எது? மக்களைக் கொன்று வேள்வி செய்ததை மகிழ்ச்சியோடு கூறி வற்புறுத்துவது எது? இந்த உலகமே சான்றுவிடும் “சமஸ்கிருதம்” அன்றோ?

அவர்களைப் பாருங்கள்.