செத்த சமஸ்கிருதத்தை இருப்பதாய்க் காட்ட - பொய்மை மிகுந்த அவர்களின் நூற்கருத்துக்களை உயர்ந்தனவென்று உலகெங்கும் காட்ட - அரசியல் தலைவர்களும், அரசர்களும், நீதிபதிகளும் மற்றும் அலுவலால் பதவியால் பேர்பெற்றவர்களும் உழைக்க முன்வந்துள்ளார்கள். தம்மேற் போட்டுக் கொண்ட பணிகளை வெற்றிபெற வைக்கின்றார்கள். இவர்களைப் பாருங்கள். இந்நிலப் புகழ் வாய்ந்த தமிழர் ஏ. இராமசாமி முதலியார் தமிழ் மொழியை, தமிழர் தத்துவத்தை, தமிழ் மேன்மையை, தமிழர் தொன்மையை எண்ணுகின்றாரா? ஏற்றமுடையதைச் செய்கின்றாரா? அதன் ஆற்றலை அழிப்பாரை அடக்கக் கண் திறந்து பார்க்கின்றாரா? பார் முழுவதும் பேர் சொல்லும் தமிழர் ஏ. இலக்குமணசாமி முதலியார் நினைத்தால் இனிக்கும் தமிழும் தமிழிலக்கியமும் உலகை ஆளாதா? வையம் போற்றும் தமிழர் எஸ். ஜி. மணவாளராமானுஜம் இருக்கும்போதும் தமிழர் ஒளி பகைவரால் மாய்க்கப்படுகின்றது என்றால் யாருக்குக் குறைவு? தரத்தில் குறைந்தது தமிழ் என்று உரைத்தார். பகைவர் என்றால் தமிழன் எம். இரத்தினசாமி அவர்களுக்கு எரிச்சல் வரவேண்டாமா? பேரறிஞர் எஸ். இராமநாதனை நாம் பெற்றிருக்கின்றோம், என்று தமிழர் பெருமையுறுவதுண்டு. தமிழருக்குப் பரிந்து அவர் வரிந்து கட்டிக்கொண்டு முன்வர வேண்டாமா? நீதிபதி சோமசுந்தரம் அவர்கள், நீதிபதி கணகபதியாபிள்ளை அவர்கள், நீதிபதி நாடார் அவர்கள், விஞ்ஞா |