னச் செல்வர் ஜி.டி. நாயுடு அவர்கள் முதலியவர்கள் தமிழன்னையின் தவப்புதல்வர்கள் அறிவாற்றலால் உலகப் புகழ் வாய்ந்தவர்கள் கண்கலங்கும் தமிழன்னையை ஒருமுறை எண்ணினாலும் போதும். இவர்களைப் பாருங்கள். தமிழ் படிப்பதும், தமிழ் தத்துவ நூற்களை ஆராய்வதும் தாழ்வு என்று எண்ணியிருக்கின்றார்கள். அது மட்டுமா? அவர்களைப் பாருங்கள். தம் மொழி, நாகரிகங்களுக்கு உழைப்பான் ஒருவனை வரிந்து கட்டிக்கொண்டு ஓடி எல்லோரும் ஆதரிக்கின்றார்கள். உழைக்கின்றார்கள். அதுமட்டுமா? எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தம் மொழி நூற்களை ஆராய்ச்சி செய்வதில் தவறுவதே இல்லை. இவர்களைப் பாருங்கள். ஒரு தனி முதியவர் தமிழர் மேன்மைக்குத் தூக்கமின்றித் துய்ப்பதுமின்றி உழைக்கின்றார். இருக்கும் உலகப் பேரறிஞர்கள் என்ன செய்கின்றார்கள்? அந்த முதியவர் - பெரியவர் இராமசாமி தமிழர் மேன்மையைப் பற்றிய எல்லாத் துறைகளிலும் உள்ளஞ் செலுத்தட்டும் என்று எண்ணி வாளாயிருப்பது இந்நாளா? வேண்டும். தமிழர் வரலாறு, தமிழின் தொன்மை, மேன்மை, தமிழிலக்கியம் உலகுக்கு இன்றியமையாமை அனைத்தினையும் உலகெல்லாம் பரப்பவும், தமிழகத்திலும் பிற நாடு |