58 அவர்களைப் பாருங்கள்
ஆரியர் பலரும் கூடுகின்றார்கள் பாருங்கள்! பொய்யை மெய்யென்று உலகுக்குக் காட்ட உலவுகின்றனர் பாருங்கள் சமஸ்கிருத விசுவபரீஷத் (1951, மே, 11-12) நோக்கங்கள்: (அ) அதேனோடு தொடர்புள்ள சமஸ்கிருத மொழியையும், பாலி மொழியையும், பிராகிருத மொழியையும் எல்லோரும் படிக்க வேண்டுமாம். அதற்கு ஆவன செய்ய வேண்டுமாம். செத்துப்போன சமஸ்கிருதத்தை இருப்பதுபோல் பேசுவது எதற்கு இருக்கும் தமிழைச் செத்ததுபோல் காட்டுவதற்கு அல்லவா? (ஆ) இந்து தத்துவம் பற்றியும் அதனோடு தொடர்புடைய மற்றவை - (புராணம் - கொலை வேள்வி - கழுவாய்) பற்றியும் ஆராய்ச்சி செய்ய வேண்டுமாம். அவ்வாறு நடைபெற்று வரும் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டுமாம். இந்தக் கற்பனைப் பேச்சுக்களால் முதலில் தோன்றிய தமிழ் நான்மறையையும் தமிழன் முதலில் கண்ட எண்ணூலையும் (சாங்கியம்) தொன்னூலாகிய தொல்காப்பியம், திருக்குறள் முதலிய மெய்ந்நூற்களையும் உலகம் மறந்து விடவேண்டும் போலவும்! (இ) இந்த நோக்கங்களைக் கொண்டோ - இதே துறையில் ஈடுபட்டோ உலகம் எங்கும் இயங்குகின்ற |