எல்லா நிறுவனங்களோடும் சேர்ந்து பணியாற்ற வேண்டுமாம். இப்படி பல நிறுவனங்கள் உலகில் இருக்கின்றன போலும். (ஈ) இந்த முடிவுகளைச் செயற்படுத்த எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளப் போகின்றார்களாம். மெய்ம்முயற்சி, பொய்ம் முயற்சிகளில் எதையும் மேற்கொள்வார்கள். மெய்ம் முயற்சிக்கு எங்கே போவார்களோ தெரியவில்லை. (உ) சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஒன்று நிறுவ வேண்டுமாம். அல்லது சமஸ்கிருதம் பற்றிய நிறுவனம் எதையாவது நிறுவ வேண்டுமாம். அல்லது எந்தப் பல்கலைக்கழகமோ, எந்த நிறுவனமோ, தம் கண்காணிப்பின்கீழ் வரும் வாய்ப்பிருந்தால் விடக்கூடாதாம். நேர் வழி போக வேண்டும் என்ற கட்டாயம் வேண்டுமாம். அடிப்படையில் நேர்மையிருந்தால்தானே! (ஊ) தம் மரபைப் பாதுகாக்கும் கல்விக் கழகங்களை ஊக்கப்படுத்திப் பரப்ப வேண்டுமாம். ஏமாறும் இனங்கள் இப்போதும் இருந்தால்தானே! (எ) சமஸ்கிருத மொழிப் பற்றையும் அதைச் சார்ந்த மற்ற மொழிகள் பற்றியும் ஆராய்கின்ற - பரப்புகின்ற எல்லா நிறுவனங்களையும் ஒன்றுபடுத்தும் நோக்கத்தோடு சமஸ்கிருதப் பேராசிரியர்களையும் இந்து சமய தத்துவ ஆசிரியர்களையும் குறிப்பிட்ட காலத்தில் ஒன்று கூட்ட வேண்டுமாம். (ஏ) இவைகளைப் பற்றிய நூல்களையும் மலர்களையும் இதழ்களையும் வெளியிட வேண்டுமாம். |