(ஐ) கண்காட்சிகள் ஏற்படுத்த வேண்டுமாம்! ஏடுகள், நாணயங்கள், செப்புப் பட்டையங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், படங்கள் இவற்றின்மேல் தம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமாம். அப்போதுதானே மாற்றியமைக்க வாய்ப்பு ஏற்படும். (ஒ) சமஸ்கிருத நூற்கள், தத்துவ நூற்கள் - இவை பற்றிய மலர்கள் ஆகியவற்றைத் தொகுத்து வைத்துள்ள நூல் நிலையங்களின்மேல் தம் ஆட்சியைத் திணிக்க வேண்டுமாம். எல்லாம் ஆரியர் நாகரிகமே என்று சாட்டத்தக்க வாய்ப்பு வேண்டுமாம். (ஓ) இந்து தத்துவத்தை ஆராய்வதற்கும் பரப்புவதற்கும் பேராசிரியர், படிப்பவர்கள், விரிவுரை ஆற்றுபவர், உறுப்பினர்கள் ஏற்படுத்தப் பணிபுரிய வேண்டுமாம். விடா முயற்சி செய்ய வேண்டும். செல்லாக்காசை செல்ல வைப்பது இலேசல்ல அல்லவா? (ஔ) தேர்வுகள் நடத்த வேண்டுமாம், பட்டங்கள் வழங்க வேண்டுமாம். இதனோடு பணமும் கொடுத்தால் நோக்கம் இலேசாக நிறைவேறும். (க) இந்தப் பரீஷத்திற்குக் கிளைகள் எங்கும் நிறுவப்பட வேண்டுமாம். செய்தி புரியாத அயல் நாடுகளில் காசு செலவழித்தால் நிறுவத் தடை ஏற்படாது. (கா) மேற்சொன்ன நோக்கங்களை நிறைவேற்ற எல்லா வகையான உபாயங்களையும் மேற்கொள்ளலாமாம். |