பக்கம் எண் :

237

பாருங்கள் அவர்களை!

இதுமட்டுமன்று; இந்த முயற்சி பற்றி அவர்கள் பல்லோர் முன்னிலையில் எடுத்துக் கொண்டுள்ள சூளுரையைப் பாருங்கள்.

அகில பாரதீய சமஸ்கிருத பரீஷத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள், பக்தியுடனும் உறுதியுடனும் எடுத்துக் கொள்ளும் பிரதிக்ஞை இது!

(அ) இந்தியப் பண்பாட்டிற்கும் ஆத்ம வளர்ச்சிக்கும் பாதுகாவலாக இருப்பது சமஸ்கிருத மொழி ஒன்றே யாகும்.

உலகத்தின் உயர்தனிச் செம்மொழியாகவும் இந்தியப் பண்பாட்டினையும் உண்மையையும் உணர்ந்து கொள்வதற்கேற்ற திறவுகோலாக உள்ளதும் அம்மொழியேயாகும்.

மேலும் சமஸ்கிருத மொழியின் வழியாகவும அதனோடு தொடர்புடைய மற்ற மொழிகளின் வழியாகவுமே உலக உயிர்கள் எல்லாம் ஆத்ம விளக்கம் அடைய முடியும்.

(ஆ) இந்தியாவின் உடனடியான இன்றியமையாத தேவைகள் சமஸ்கிருத மொழியைப் பெருக்குவதனாலேயே தான் நிறைவேறும்.

வாழ்வுக்குரிய உடம்பு, உயிர் போன்ற இன்றியமையாததாகச் சமஸ்கிருத மொழி ஆக்கப்படவேண்டும்.

இந்து தத்துவ ஆராய்ச்சியும், வளர்ந்து வரும் அறிவு வளர்ச்சியினோடு இணைந்து செல்வதற்கான பணியாவும் நம்முடையவை என்று நாம் சொல்லிக் கொள்கின்ற வேறுபட்ட - பலவகைப்பட்ட பண்பாடுகளை நம்முடையவைகளே என்று உலகுக்குக் காட்ட வேண்டும்.

(இ) இக் குறிக்கோள்களை அடைய வேண்டி இந்தச் சமஸ்கிருத விசுவ பரீஷத்து என்ற நிறுவனத்தை