பக்கம் எண் :

238

அமைப்பது என்றும், அந்த நிறுவனம் “சோமநாதர்” அறநிலையத்துடன் பரீஷத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் கொண்டு உலகெங்கும் இயங்கிவரும் பிற நிறுவனங்களுடன் கூடிச் செயலாற்ற வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறுகின்றோம்.

இந் நோக்கங்களை நிறைவேற்றுவோம் என்பதில் எங்கட்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இவையே நாங்கள் எடுத்துக் கூறும் “சூளுரை”

மேற்கொண்ட சூளுரையை அனைவரும் மேற்கொண்டதற்கு அடையாளமாக எங்கள் கையொப்பங்களை இடுகின்றோம்.

பத்மநாபதாச பலராம வர்மா (திருவாங்கூர்)

பாபு புருஷோத்தம தாசு தாண்டன்

கே. எம். முன்ஷி

டாக்டர் இராஜேந்திரபிரசாத்

சேம் சாகிபு (நவநகர்)

எச். வி. திவேதியா

நீதிபதி என். எச். பகவதி

பிக்கு ஜினரத் நாஜி

உமேஸ் மிச்ரா

ஆச்சார்யா டி.ஏ.வி. தீட்சிதர்.

மற்றும் பலர்.

குயில், 16-6-59

*