பக்கம் எண் :

240

செய்வதற்காக ஏழைகள் இருக்க வேண்டும் என்று அவ்வளவு பொதுவாக தருமம் பெறுகின்றவர்களிலிருந்து தம்மை விலக்கிப் பேசுவதை ஆச்சாரியாரிடம் நாம் இனியும் காண முடியாது.

பணக்காரர் இருக்க வேண்டும்; அவர்களைத் தாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது தமக்கே அவர்கள் பயன்பட வேண்டும் என்பதுதானே அவரின் அடிப்படைக் கொள்கை.

இனி,

குன்றக்குடியார் சொல்வதை நோக்குவோம். அவர் உலகில், ஏழ்மையை ஒழித்துவிட முடியும் என்று நினைக்கிறார். அதை விடுதலை ஆசிரியரும் ஆதரிக்கிறார். ஏழ்மை என்றால் வறுமை! வறுமை காரணமாகத்தான் ஒருவன் இரக்கும் நிலையை அடைகின்றான். அதனால் இரந்து உண்பானையும் ஏழை, வறியவன் என்றே தமிழில் கூறுவதுண்டு.

இந்த வறுமை, உலகில் இருந்து கொண்டுதான் இருக்கும்; அடியோடு ஒழிக்க முடியாது என்றும், அந்த வறுமை உலகில் இருந்து கொண்டு இருப்பதும் உலக மக்களின் நடைமுறையில் ஒரு சுவையை உண்டாக்கும் என்றும், வறியவர் அதாவது இரப்பவர் உலகில் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவை இராது. நடைமுறையானது மரப்பாவை இயங்குவது போலிருக்கும் என்றும் திருவள்ளுவர் கூறுகின்றார்.

இதை நாம் இன்னும் சிறிது நுணுகி ஆராய வேண்டும்.

இரந்துண்ணும் நிலைக்கு, அதாவது வறுமைக்கு எது காரணம்?

ஈத்துவக்கும் நிலை. அதாவது செம்மைக்கு எது காரணம் என்று நோக்கினால் அறியாமையும் அறிவுடைமை