பக்கம் எண் :

241

யுந்தான் காரணம் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். எனவே அறியாமை காரணமாகத்தான் வறுமை உண்டாகின்றது. அறிவு காரணமாகத்தான் செம்மை (செல்வம்) உண்டாகின்றது.

கேள்வி: குருடனும் முடவனும் நொண்டியும் வறியவர்களாகி - இரப்பவர்களாகிக் கிடக்கின்றார்கள். அவர்களின் ஏழ்மை நிலை அறியாமையாலா வந்தது?

விடை : அவர்களின் அறியாமையால் அவர்கட்கு அந்நிலை (நொண்டி முடவன் என்ற நிலை) ஏற்பட்டது. பிறக்கும் போதே அந்நிலையோடு பிறந்தார்கள் என்றால் அவர்களின் பெற்றோரின் அறியாமை காரணம்.

கேள்வி:- முற்பிறப்பில் செய்த தீவினை காரணம்!

விடை: அது கயிறு!

இனி,

செம்மை நிலைக்கு அறிவுடைமைதான் காரணம்! இல்லையா?

கேள்வி: அறிவுடையவன் ஏழ்மைநிலை அடைகிறான். அறிவில்லாதவன் செம்மை அடைந்திருக்கின்றான். மேலும் அறிவுடையவன் செல்வத்தை இழந்து விடுகிறான். அறிவில்லாதவன் செம்மை நிலையைச் (செல்வத்தை) பெறுகின்றான். இவற்றிற்குக் காரணம் என்ன?

விடை: இவை சிறுபான்மை. இவற்றிற்கு ஊழ் என்ற தெய்வம் காரணம் என்பார்கள். சமயக் கணக்கர். அது புரட்டு. அரசியல் சட்டம் காரணம்! ஊழ் என்றாலே சட்டம் என்பதே பொருள். ஊரில் பரவலாக விற்கக் கூடிய சரக்கை எல்லாம் ஒருவன் வாங்கிக் குவித்து வைக்கிறான்; விலையை ஏற்றி விற்கலாம் என்று! விலை