குறைந்து விடுகின்றது. இழப்பு நேர்ந்து விடுகின்றது. வறுமை நிலையை அடைகின்றான். இங்கு அறிவுடையவன் வறியவனானான் என்று எண்ணுகின்றார்கள். அவன் அந்த நிலையை அடைந்ததற்கு அவன் அறியாமை மட்டும் காரணம் அன்று. வாணிகம் பற்றிய சட்டமும் அவன் வறுமைக்கு காரணம் ஆயிற்று. ஒரு பாரட்லா குதிரைப் பந்தயத்தில் செல்வத்தை இழக்கின்றான். குதிரைப் பந்தயத்தை உருவாக்கியது சட்டம். சட்டமே காரணம் அவன் இழப்புக்கு! ஒருவன் தொழில் செய்வதில் தேர்ந்தவன். அறிவுடையவன். அவனுக்கு நாட் கூலி அரையணா பொற்காசு என்கிறது சட்டம். அந்த அறிவுள்ள தொழிலாளிக்கு ஏற்படும் வறுமைக்கு எது காரணம்? சட்டம் காரணம். எப்படிப் பார்த்தாலும் வறுமை அறியாமையால்! செம்மை அறிவால் என்றே முடியும். எனவே அறியாமை முழுதும் உலகினின்று ஒழியும் வரைக்கும் செம்மை என்பதும் இருக்கும் என அறிதல் வேண்டும். இல்லாதவர்களை இருப்பவர்களாக்குவதற்கு - இரப்பவரை இல்லாமல் செய்வதற்கு - எல்லோரும் நிகர் என்று ஆக்குவதற்கு அறியாமை போக வேண்டும். போகுமா? விடை: போகாது, போகாது. கேள்வி: கல்வியால் அறியாமை “தீரும் கற்பக் கழி மடம் அஃகும்’ என்கின்றார்களே! விடை: ஒருவன் கற்கும் அளவுக்கு - அவனிடத்திலுள்ள மடமை போகும் என்றால் அறியாமையின் முதன்மையே தீர்ந்தது என்றா பொருள்? கேள்வி: உருசியாவில் செல்வன் வறியவன் என்ற இரட்டையே ஒழிந்துவிட்டதல்லவா? விடை: அது கரடி. கேள்வி: புதிய சீனாவில்கூட அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளதாகச் சொல்லுகின்றார்களே? |