பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும்மற் றென்னுடைய ரேனும் இலராவர் - இன்அடிசில் புக்களையும் தாமரைக்கை பூநாறும் செய்யவாய் மக்களைஇங் கில்லா தவர்.
என்ற செய்யுளை ஆய்க. இதில் புகழ் முதலியவற்றிற்கும் முதலில் பொன் கூறப்பட்டது ஒன்று. பொன் முதலிய பொருள்களை ஒருவர் உடையவராய் இருந்தாலும் அவர் மக்கட்பேறு இல்லாதவராயின் பொன் முதலியவை இல்லாதவர்க்கு நிகர் என்பது இச்செய்யுட் கருத்து. மக்கட் பேற்றை உயர்வுபடுத்திக் காட்டப் பொன்னின் பெயரையே சொல்லிக் காட்ட வேண்டியதாயிற்று இரண்டு. மூன்றாவதாக:- மக்களைப் பெறுவது பொன்னைப் பெறுவதைவிட மேல் என்று இச்செய்யுள் கூறுவது புனைந்துரையே. மக்கள்மேல் வெறுப்புறும் தந்தையரும் உள்ளார். பொன்னை வெறுப்பார் உளரோ. மக்களைப் பெற்றவரைக்கும் போதும் என்பவர், பொன்னைப் பெற்றவரைக்கும் போதும் என்பதுண்டா? மக்களைப் பெற்றவரும் அம்மக்களைப் பொன் அணிவிப்பதன் மூலமே மகிழ்ச்சியடைகின்றனர். குண்டுமணிப் பொன்னுக்கும் வழியில்லை. ஆதலால் எனக்கேன்பிள்ளை என்பாரும் உள்ளார். நாட்டின் நிலை கண்டு மக்கட் பேற்றைக் கட்டுப்படுத்தச் சட்டமும் செய்தனர். அவர்கள் பொன்னின் அளவைக் கட்டுப்படுத்தத் தொடங்கினால் வேடிக்கைதான். நாட்டை ஆளுகின்றவர் அரசர் என்றும், மக்களின் படித்திருவாளர் என்றும் சொல்லுவதில் உண்மையிருப்பதாகக் கூறமுடியாது. அந்தந்த நாட்டையும் ஆளுவது அந் |