பக்கம் எண் :

255

தந்த நாட்டில் அமைந்த பொன்னே! என்னே, பொன்னின் பெருமை!

இனிப் பொன்னை வைத்துத் தங்கத்தை ஆராய வேண்டும்.

தங்கம்

தங்கம் என்ற சொல், தங்கல் - தங்குதல், இருப்பு என்ற பொருளைத் தரும் ஒரு தொழிற்பெயர்.

ஒரு தொழிற்பெயர்.

அது தங்கம் என்ற பொருளுக்கு ஆகும்போது, தொழிலாகு பெயர் ஆகும்.

தங்கு, முதனிலை, அம், தொழிற்பெயர் இறுதி நிலை.

தங்கம் என்ற சொல்லால் குறிக்கப்படும் பொருள் பொன்னேயாயினும் பொன் என்ற சொல்லை வைக்கும் இடத்திலெல்லாம் தங்கம் என்ற சொல்லை வைத்து எழுதுவதும் பேசுவதும் சிறப்புடைத்தன்று.

தங்கம் என்ற சொல், இடம் நோக்கிக் கையாளப் பட வேண்டிய ஓர் இன்றியமையாத சொல்லேயாம்.

ஈடு காட்டும் பொருட்டுத் தங்க வைத்துள்ள பொன்னைத் தங்கம் என்று சொல்லுதல் வேண்டும்.

ஓர் அரசு நாணயத் தாளை மக்களிடைச் செலாவணிக்கு விட்டிருக்கிறது. நூறாயிரங்கோடி ரூபாய்க்குப் பதிலாக நோட்டை வெளியிட்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அங்ஙனமாயின், நூறாயிரம் ரூபாய் பெறக் கூடிய பொருளுக்கு ஈடாக அவ்வரசு பொருளறையில் பொன்னை வைத்திருப்பது இயற்கை. அங்ஙனம் இருப்பதாக, அல்லது தங்குதலாகவுள்ள அப்பொன்னைப் பொன் என்பதைக் காட்டினும், தங்கம் என்று கூறலே சாலச் சிறப்புடையது.