வட்டமாகக் கூறுகின்றார் வள்ளுவர். அவர் கொள்கைகளை எதிர்த்து வந்தனர். எதிர்த்து வருகின்ற சமயக்கணக்கர்கள், அவர்களே ஊழ் என்பதின் நேர் பொருளாகிய ‘விதிமுறை’ என்பதை மறுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள். டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் பிரார்த்தித்த கருமம் என்று ஒரு கூட்டத்தார் சொல்லி வருகின்ற ஒன்றைத் திருவள்ளுவர் ஒத்துக் கொண்டதாகக் கூறுவது பொருந்தாதது என்றும் ஊழ் என்று அவர் கூறியது துறவிகளால் கண்டு வகுக்கப்படும் சட்டத்தையே என்று குறிக்கலாம். ஆனால் உருசியாவில் இந்தியச் சமயக் கணக்கர்களால் கட்டப்பட்ட இருட்டறையைத் திறந்து ஒரு விளக்கை ஏற்றி வந்த டாக்டர் அவர்களுக்கு நேரமிருக்கிறது என்றால் அதுவும் மெய்யே யாகும். “துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால் ஊட்டா கழியும் எனின்”
இதன் பொருளைப் பாருங்கள்! துப்புரவில்லார், உறற்பால ஊட்டா கழியும் எனின் துறப்பார், மன் அசை. அதாவது:- துய்த்தற்கு வழி இல்லாத ஏழை மக்கள் தமக்குச் சேர வேண்டியவற்றைச் சேர்க்காமல் செல்லுமானால் அந்தச் சட்டத்தை மீறிப் புரட்சி செய்வார்கள் என்றவாறு. ஒருவனின் உழவுக்குக் கூலி எட்டணா என்பது பழைய சட்டமானால் இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த எட்டணா என்பதற்கு இரண்டு ரூபாய் என்பது பொருள். எனவே உழவன் இந்நாள் நாளொன்றுக்கு அடையத் தகுந்தது இரண்டு ரூபாய். உறற்பாலவாகிய இந்த இரண்டு ரூபாயைச் சட்டமானது அவர்கள் அடைய முடியாமல் நடந்து கொண்டு இருக்குமானால் அந்த உழ |