தும், பெரும் மாறுதல்களையும் உண்டாக்கி வந்தமையால், ஆரியர்களுக்கு முன்பே வடநாடெங்கும் பரவியிருந்த தமிழ் மக்கள் தமிழ் மொழியின் பயிற்சியைப் பையப் பையக் கைவிட்டு அவ்வக்காலத்துப் புதிது புகுத்த ஆரியம், பாரசீகம், சிந்தியம், கிரேக்கு முதலான பல்வேறு மொழிகளைக் கைக்கொண்டு தம் பின்னோர் நினைவு கூர்ந்தற் பொருட்டுத் தாந்தாம் செய்த நூற்களை அவ்வயல் மொழிகளிலேயே கற்களில் செதுக்கி வைப்பாராயினர். இவ்வாறே ஐரோப்பாவிலும், ஆசியாவின் பல பிரிவுகளிலும் கல்வெட்டுக்கள் தோன்றியமைக்கு ஏது, அந்நாடுகளில் பண்டைய நாளிலிருந்த மக்கட் பிரிவினர் பலரும், கொடுந் தன்மையும் கொடுஞ் செயலும் ஒருவரை ஒருவர் அலைத்து, நெருப்பினும், செந்நீரினும் அந்நாடுகளை மூழ்குவித்துப் பெருங்குழப்பங்களை உண்டாக்கி வந்தமையே கல்வெட்டுக்கள் பலவும் தோன்றியமைக்கு ஏதுவாயின! எனவே அயலவர் கலப்பினாலும், அவரால் நேர்ந்த அல்லலாலுமே வடநாட்டில் கல்வெட்டுக்கள் வெட்டும் பழக்கங்கள் பல்கி இருந்தன! குயில், 27-9-1960 * |