பக்கம் எண் :

268

சினம் இருக்கலாம்! அதை ஒழித்துவிடாதே!

நல்லவரிடம் தோன்றும் சினம் கடிவாளமிட்ட திரை! சினத்தைக் கொன்றவன் தாய்மொழியையும் காட்டிக் கொடுப்பவன். அவன் ஒரு செவிட்டு ஊமை; கொள்ளை மூக்கறையன்.

தமிழகத்தின் எல்லை அறியாதது யார் தவறு?

இடைக் காலத்தில் தமிழகத்தின் வட எல்லை வடமலை (வடவேங்கடம்) எனப்பட்டது. அதனால் விந்தியமலை முதல் குமரிவரைக்கும் தமிழ்நாடு நீண்டிருந்தமைப் புலப்படும்.

ஏன்?

அக்காலத்தில் விந்தியந் தொடங்கித் தென் பாங்கில் நீளக் கிடந்த பெருங்காட்டின் சிறப்புப் பகுதி வேங்கடம். ஆதலால் வேங்கடத்தைச் சொன்னால் வேங்கடத்தைச் சார்ந்த காட்டுப் பகுதியையும் மலைப் பகுதியையும் கொள்ள வேண்டாமா?

அந்நாளில்,

வடவேங்கடத்திற்கும் விந்தியத்திற்கும் இடையில் ஐந்தாறு நாடுகளும் ஏழெட்டு நகரங்களும் பத்துப்பத்து ஊர்களும் வாழ்தனவோ? ஒன்றுமில்லை.

இந்நாளில் சென்னை என்றால் தமிழகத்தையும் சேர்த்துக் கணக்கிடுவதில்லையா? அதைவிட்டுச் சென்னை என்றால் மார்வாடிகள் வாழும் பகுதிக்கு மட்டுமா பெயர்?

குயில், 4-10-1960

*