65 தமிழகத்தில் பஞ்சாயத்து ஆட்சி
சட்டமன்றம் என்றும், நகர மன்றம் என்றும் உள்ள நிறுவனங்களில் மட்டும் அதிகாரம் குவிந்துவிட்டது. அது பரவல் ஆக்கப்பட வேண்டுமானால் பஞ்சாயத்து ஆட்சி எங்கும் வேண்டும் என்பது இன்று தமிழக அமைச்சர்களால் ஆதரிக்கப்படுகின்றது. இது பற்றிச் சில கருத்துக்களைத் தெளிவு படுத்துவதே இதன் நோக்கமாகும். அக்டோபர் முதற்கொண்டு மூன்று கட்டமாகப் பஞ்சாயத்து ஆட்சிமுறை தேவை என்பது பற்றிப் பஞ்சாயத்து மாநாடு ஒன்று 25-9-60-ல் நடத்தப்பட்டது எங்கும். இந்தக் கிளர்ச்சி மாநாட்டை முன்நின்று நடத்துகின்றவர்கள் யார் தெரியுமா? மாவட்ட கலெக்டர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் முதலியவர்களே! அடி சச்கே! முழக்கம் சின்னதாகவா இருக்கும். பறையின் தோல் கிழிந்தே போகாதா? அக்டோபர் துவங்கி முதற்கட்டமாக 75 பஞ்சாயத்துக்கள் ஏற்படுத்திவிட்டு மறுவேலை பார்க்கப்படும். மற்ற இரு கட்டங்களிலும் இந்த மாநிலம் முழுவதிலும் 374 பஞ்சாயத்து யூனியன்கள் கொழுக்கட்டை மாதிரி பிடித்து வைக்கப்பட்டுவிடும். மதுரை, கோவை, திருச்சி, தேவகோட்டை, வேலூர், ஸ்ரீபெரும்புத்தூர் ஆகிய இடங்களில் இவ்வகை மாநாடுகள், மேளதாளத்தோடு பெட்டி வாண ஊர்வலத்தோடும், ஆடல் |