பாடல்களோடும் நடைபெற்றுள்ளன. முயற்சியின் நோக்கத்தின்படியே நூற்றுக்கணக்கான மக்கள் குட்டைவெள்ளம் போல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மாநாட்டில் சட்டமன்றத் தலைவர் யூ. கிருஷ்ணாராவ் நாவசைத்த சிறுபகுதியை நினைவில் வைக்க வேண்டும். அவர் சொன்னார்:- ஆட்சியாளர் இதுவரைக்கும் செய்து வந்துள்ள திட்டங்களால் மக்களுக்கு நன்மை ஏற்படவில்லை. ஆதலால் தான் இந்தப் புதிய பஞ்சாயத்து முறைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். இவற்றால் நன்மை ஏற்படும். பஞ்சாயத்துக்களுக்குப் பொறுப்பு அதிகம். உணவு, அபிவிருத்தி, குடும்பக்கட்டுப்பாடு, கல்வி, உடல்நலம், குடிநீர் முதலியவைகளில் இனிச் சிறிதும் புறக்கணிப்பு ஏற்படவே ஏற்படாது. மக்களின் பெரிய பெரிய தேவைகளையெல்லாம் மக்களே அரசினர் உதவியால் நடத்திக் கொள்ளலாம். இதனால் எல்லாக் கட்சிகளும் நலம் பெறலாம். இன்னும் பல. திரு. எம். கோஷாச்சாரி சொன்னதையும் கேளுங்கள்; சட்ட நடவடிக்கைகளில் புதிய மாற்றங்களை விளக்கிய அவர் ஆலய விழாக்களுக்கு மட்டும் வரி ஏற்படுத்தப்பட்டதுபோலவே கல்வி, உடல்நலத்துறைக்கும் வரி ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். அதன்பிறகு, தாலுக்கா, ஒன்றிற்கு ஆறு பஞ்சாயத்து ஏற்படும். இதனால் மக்கள் நேரே தம் காரியங்களை நடத்திக் கொண்டு போக வழி ஏற்படும் என்றும் ஏ.கே. தங்கவேல் எம்.எல்.சி. கூறினார். இவைகளை ஏன் இங்கு எடுத்துக் காட்டினோம் என்றால் இப்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பஞ்சாயத்தைக் கொண்டு அரசினர் எதை அடைய நினைக்கின்றார்கள்? அவர்கள் உள் எண்ணம் என்ன என்பவற்றைப் புரிந்து கொள்வதற்காகவே என்க! |