பக்கம் எண் :

271

முதலில் நீங்கள் கருத வேண்டியது என்ன? பஞ்சாயத்தால் ஏற்படும் நன்மைபற்றி அமைச்சர்களும், சட்டமன்றத்தினரும் பேசியவற்றில், தமிழ்நாடு, தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழ்க்கலை ஆகிய இவைபற்றி ஒரு பேச்சு உண்டா என்பதை நோக்குக!

இந்நாள், அரசினர் கொள்கைகளுக்கு நேர்மாறாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் எண்ணம் என்பதை ஊன்றி உணர வேண்டும். குஞ்சக்காரிகள் விடுதியின் பக்கம் குடித்தனக்காரி திரும்பாததுபோல இந்தியை ஆதரிக்கும் அரசினர் நோக்கம்போல மக்கள் திரும்புவதில்லை. தமிழ் நாட்டுக்கு “தமிழ்நாடு” என்று பெயர் வைக்க மறுக்கும் அரசினர் ஆட்சியாளர் மூஞ்சியில் விழிக்க மறுக்கின்றார்கள் தமிழ்மக்கள்.

தமிழ் பண்பாட்டை, தமிழர்களின் இன்றியமையாதவைகளைக் கட்சி சிறிதும் ஏறெடுத்துப் பார்க்கவும் மறுக்கும். அரசினரை - ஆட்சியாளரை மக்கள் மதிக்கவே மாட்டார்கள்.

தமிழரை எதிர்க்கும் தமிழரின் பகைவர்க்கே இந்த நாட்டில் சலுகைகள் மிகுதி! நெய்வேலி முதலிய ஊர்களில் சென்று பாருங்கள். ஊரெல்லாம் பார்ப்பனர்கள் அலுவலின் தலைமையும், இடைமையும் நூற்றுக்கு நூறு பார்ப்பனர்க்கே!

தமிழை எதிர்க்கும் இலக்குமணசாமிகட்கும் தமிழரைக் காட்டி கொடுக்கும் கயவர்களுக்கும் சலுகைகள் மிகுதி. மார்பை மறைப்பதாகக் கூறிக்கொண்டு மார்பின் துணியை விலக்கி விலக்கிக் காட்டும் தோல்வணிகர்கள்போல இந்தியை ஒழிப்போம் என்று கூறி அதை நிலை நிறுத்தி வருகின்றார்கள். அரசினர்களும், அமைச்சர்களும் பிறரும் சேதுப்பிள்ளைகளுக்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இடம் கொடுப்பதாக ஆசை காட்டித் தமிழுக்கே உலை வைக்கச் செய்கின்றார்கள், அரசினர்களும் ஆட்சியாளர்களும்.