தமிழகத்தில் தமிழர்களின் கோயில்களில் வடமொழி வழிபாடு ஏன் என்று கொதிக்கும் நெஞ்சங்களில் தீயை வைக்கின்றார்கள். அமைச்சர்கள், ஆட்சியாளர்கள், அரசினர்கள். சாதி வேண்டாம் என்பதை ஆதரிப்பதுபோல் நடிக்கின்றார்கள், அமைச்சரும் அவரும் இவரும். அதே நேரத்தில் கோயிலில் நுழைந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரப்பையன் தமிழர்களுக்குத் தரநேரும் சாம்பலையும் தேங்காய் முடியையும் தமிழர்களின் காலண்டையில் வீசித்தான் எறிய வேண்டுமாம். அந்தப் பிச்சைக் கூட்டம் தூய்மை உடைய கூட்டமாம். இப்படி பக்தவத்சலம். தமிழை - தமிழ் மாணவர்களைத் தமிழர்களே நிலைகலங்கச் செய்யும் வகையிலும், தமிழர்களின் ஆணிவேரை அடியோடு பிடுங்கும் வகையிலும் அரசினரும், அமைச்சர்களும், செய்து வரும் திருத்தொண்டுகள் திரைமறைவில் நடப்பவை கொஞ்சமல்ல. மிகுதி! ஒன்றல்ல; நூற்றுக்கு நூறு! பாலம் கட்டப்படுகின்றது! ஏன்? மக்களை மடக்க, அவர்களின் இயற்கையான விருப்பங்களை நிறைவேற்ற அல்ல. பஸ்ரூட் தனிப்பட்டவர்களுக்குத் தரப்படுகின்றன. ஏன்? ஆளை வளைக்க! தமிழ் வாழ அல்ல! அதைத் தொலைத்து வரும் நாடகத்திற்குத் திரைபோட. கல்வித்துறை விரிவுபடுத்தப்படுகின்றது. பள்ளிக்கூடங்கள் மிகுதியாக்கப்படுகின்றன. ஏன்? இந்திக்கு வழிவிட! எல்லோரும் படித்தாக வேண்டுமே என்ற கவலையினால் அல்ல! ‘அடடா! இவர்கள் கல்விக்கு நல்லது செய்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் தமிழைக் கொல்லுவார்களோ’ என்று மக்களை எண்ண வைக்கவே. ஆங்கிலத்தை விடமாட்டோம்; கெட்டியாக பிடித்துக் கொள்வோம். இந்தியையும் விடமாட்டோம்; கெட்டியாகப் பிடித்துக் கொள்வோம் என்றெல்லாம் கூறிவரும் பித்த |