பக்கம் எண் :

273

லாட்டக்காரர்களைத் தமிழ் மக்கள் ஆதரித்து விடுவார்கள் என்பது இவர்களின் பகற்கனவு! இன்றல்ல, இன்னும் இருநூறு ஆண்டுகள் கரடியாய்க் கத்தினாலும் தமிழைத் தின்னும் இந்திப் பெருச்சாளிகளை ஆதரிக்கப் போவதில்லை தமிழர்கள்!

எனவே,

தமிழ் மக்கள் கவலை வேறு; அவர்களின் பெரு விருப்பம் வேறு. இன்றைய அரசினர், ஆட்சியாளர் விருப்பம், வேறு மறைமுகமாக சூழ்ச்சி.

ஆட்சியாளர் அரசினர் ஆகியோரைக் கண்ணெடுத்துப் பாராமல், தமிழ்ப் பெருமக்கள் வேறுபுறம் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழர்களைத் தங்கள் பக்கம் சேந்த வீசப்படும் கடைசி வலைக்குத்தான் பஞ்சாயத்து ஏற்பாடு என்று பெயர்.

தமிழகத்திற்குப் பிறந்தவன் ஒரு பெரும்மொழியை - பண்டைமொழியை உயர்தனிச் செம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவன். அயல் மொழியே என்றும் இருக்கவேண்டும் என்கின்றான். அதாவது, தமிழன் ஆங்கிலத்தை கேட்கின்றான். விரும்புகின்றான். இருக்கவேண்டும் என்கின்றான். இது உலகப் புதுமையில் ஒன்று. காட்டுமிராண்டித்தனத்தின் எடுத்துக்காட்டு.

புதிய புதிய பொருட்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றிற்கெல்லாம் பல காரணங்களால் தமிழில் பெயர்கள் இல்லை. அவைகள் தமிழில் ஏற்பாடு செய்யுமட்டும் ஆங்கிலம் இருக்கட்டும் என்பவன் ஒருவன் இருந்தால் அவன் மனச்சான்று உடையவன். நல்லவன். அவனால் நாட்டுக்குத் தீமை ஏற்படாது; அவனை நாம் பாராட்டத் தடையில்லை.