இப்படி, எவனாவது சொல்லுகின்றானா? நான் ஆங்கிலத்தால் சம்பாதிக்கின்றேன். மக்களால் அல்ல, தமிழால் அல்ல! ஆதலால் ஆங்கிலமே எந்நாளும் இருக்கட்டும் என்று இவன் கூறுவதாகத்தானே பொருள்! இந்த மனக் கோளாறுகட்கும் காட்டிக் கொடுக்கும் கடமைக்கும் இன்றைய அரசினர் காரணம். மக்களின் கண்ணில் தூவப்படும் மிளகாய்ப்பொடிக்குப் பெயர் பஞ்சாயத்து ஆட்சி. சிற்றூரில் அடிமையாய் வாழ்ந்து வரும் தமிழர்களை தமிழில் புதைந்து கிடக்கும் அவர்களின் உள்ளங்களை அரசினர் - ஆட்சியாளர் என்ற முரட்டு மாடுகளை இயற்கையில் வெறுக்கக் கூடிய பழந்தமிழர்களைத் தங்கள் காலில் போட்டுக் கழுத்தையிறுக்க ஏற்படும் சூழ்ச்சிக்குப் பெயர் பஞ்சாயத்து ஆட்சி. சிற்றூரில் ஏற்பட்டது ஒரு பஞ்சாயத்து! அவர்கள் தமிழ்நாடு என்றுதான் நம் தாய்நாட்டை அழைக்க வேண்டும் என்று முடிவு கட்டினால் அவ்வாறே செயற்படுத்தப்படுமா? கோயில் தமிழன்றிப் பொருள் தெரியாத கூச்சல் வேண்டாம். எங்கள் திருவாசகம் வேண்டும். எங்கள் திருவாய்மொழி போதும் என்று சொன்னால் பார்ப்பன அரசினரை பார்ப்பன ஆட்சியாளர் பல்லை நறநறவென்று கடிக்கமாட்டார்கள் என்பதற்கு உறுதிமொழி உண்டா? எங்கள் பிள்ளைகளின் வாயில் இந்தி இரும்பாணி நுழையாது என்று பஞ்சாயத்து பழந்தமிழர் முடிவு கட்டினால் நேரு “நான்சன்ஸ்” என்று கூறமாட்டாரா? கூறினால் இங்குள்ள அமைச்சர் அதற்கு மகிழ்ச்சி காட்ட மாட்டார்களா? பஞ்சாயத்தார் முடிவே முடிந்த முடிவு என்ற ஒரு சொல் உறுதிப்படுத்தாவிட்டால் இந்தப் பஞ்சாயத்து |