ஏற்பாடு வேண்டாம். அது தீயர் போடும் வலை. தமிழர் கண்ணுக்கு மிளகாய்ப்பொடி. பஞ்சாயத்தார் முடிவே முடிந்த முடிவு என்று உறுதி கூறினால் மட்டும் போதாது. தமிழன் எல்லா துறைக்கும் நேராகவோ மறைமுகமாகவோ அதிகாரிகளாலும் ஆளவந்தார்களாலும் ஏற்படும் எல்லாவகைத் தீங்குகளுக்கும் பஞ்சாயத்தார் ஒத்துப் போனதாகத் தெரிந்தால் அந்த பஞ்சாயத்து நிறுவனம் ஒழிந்து போனதாகக் கருத வேண்டும். அதற்கான அடிப்படைச் சட்டம் வேண்டும். தமிழுக்கு சாவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வானொலி என்ற சொற்றொடர் கேட்டால் அதிகாரிகளின் காது எரிமலைக்குமுன் புறாக்குஞ்சு! தமிழ்க்கலை மாண்டு போனதற்குக் கல்லில் எழுத்து எழுதுகிறது இந்த ஆட்சி. குயில், 4-10-1960 * |