பக்கம் எண் :

277

இன்னும் இது விளக்கப்படும்.

அறிவு நிரம்பாத மிகப் பழநாள், மக்கள் காற்றையும், காட்டிற்தோன்றும் தீயையும், மழையையும், வெயிலையும் தெய்-தெய்வம் என்றனர். அவற்றின் பயன் உணர்ந்தபின் அவர்கள் அவற்றை வாழ்த்தினர். தெய்வம் என்பது கண்ணையும் கருத்தையும், மனத்தையும் கவர்வதும், பயன்படுவதுமான பொருளுக்குப் பெயர்.

செங்கதிர் அழகியது. பயன்படுவது; அதைப் போற்றினார்கள்! நிலவும் அப்படி; மழையும் அப்படி!

மற்றும் நீரையும், நிலத்தையும், தீயையும் தமிழ் நூலையும் மொழியையும், மலையையும், பிறவற்றையும் தெய்வம் என்று கூறுவதை நோக்குக!

மொழி நூல் வல்லவர், ‘தெய்வம் என்ற சொல்லை நோக்கி இகழ்தல் வேண்டாம். மரபு நோக்கிடுக!’ என்பார். ‘தெய்வம் இகழேல்’ என்றார் ஔவையார்.

பயன்படு பொருளையும் கண்ணையும், மனத்தையும், கவர்கின்ற பொருள்களையும் இகழக்கூடாது என்பதை இதனால் அறிந்து கொண்டோம்.

குயில், 11-10-1960

*