பக்கம் எண் :

278

67
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்


இஃது உலகநீதிச் செய்யுளில் ஒன்று. இதன் பொருள் வருமாறு:-

கோயில் - அரசியல்; இல்ல - இல்லாத ஒழுங்குமுறையமையாத ஊரில் - ஊரிலே குடியிருக்க வேண்டாம் - குடியிருக்கக் கூடாது என்பது பொருள்.

கோயில் என்பது அரசன், அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதைப் பழம் தமிழ் நூற்கள் நன்றாக விளக்கும்.

“மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும்”

என்ற சிலப்பதிகார அடிகளை நோக்குக!

அரசியல் அமைந்த இடம் என்றால் என்ன?

அஃது அமையாத இடம் என்றால் என்ன என்பதை ஆராய வேண்டும்.

பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்குமுறை வகுத்தார்கள். அதைத்தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டு வந்தான்.

இவ்வாறு ஒழுங்கு முறை வகுக்கப்படாத காலம் ஒன்றிருந்திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டு