பக்கம் எண் :

28

உட்கார்ந்து கொண்டு ஜனங்களை அழைக்கிறார் சிவபெருமான். இந்த இடமட்டுமல்ல, லக்ஷக்கணக்கான இடங்களில் அச்சிவபெருமான் பலபல உருவங்களோடு பலபல பேர்களோடு பலபல விளம்பரங்கள் மூலம் அழைக்கிறார்.

அவருடைய பெண்டாட்டிகளும் அப்படியே, பலபல இடங்களில் பலபல நாமங்களுடன் அடியார்களை எதிர்பார்க்கிறார்கள். பிள்ளைகளும் அப்படியே. அப்பன் பிள்ளைகள் தவிர, இவர்களின் வைப்பாட்டிகளும் அப்படியே. இவர்களுடைய அடியார்கள் நாயன்மார்களும் கடவுள் என்ற நிலையை அடைந்து அன்பர்களை அழைத்தபடி ஆலயங்களில் அமர்ந்துள்ளார்கள். இவையெல்லாம் நாம் கற்பனையாகச் சொன்னதன்று. ஒவ்வொன்றிற்கும் சாத்திரம், ஆதாரங்கள் உண்டு. பக்த கோடிகளின் தினசரி அநுஷ்டானங்கள் கண்ணெதிரில் உண்டு.

இதுவரையில் சிவபெருமான் வகையார்கள் விஷயம் தீர்ந்தது. இரண்டாவது விஷ்ணுமூர்த்தி வகையாரும் அப்படியே. இவ்விருவகையார் கோயில்களிலும் சமயக்குரவர் ஆழ்வாராதியரால் பாடல் பெற்றவை உயர்வு. பாடல் பெறாத கோயில்கள் சில அடிகள் சில அங்குலம் தாழ்வு. இன்னும் காளி, மாரி, வீரி, காத்தான், ஐயனார், காட்டேரி, வீரன், மாடன் சங்கிலி கறுப்பன், கன்னி, முனி, பாவாடை, காத்தவராயன், நொண்டி, துலுக்கன், புட்ளாயி, இரிசன், வேம்படியான், மாவடியான், காமன், முத்தால் ராவுத்தன், மதுரை வீரன் இவர்கள் கோயில் பலபல. இனிக் கிறிஸ்தவர் கோயில்கள், மாதாக் கோயில்கள், சேசுநாதர் கோயில்கள், இருதய ஆண்டவர் கோயில்கள், அந்தோனியார் கோயில்கள், ஐந்து காயவரம் பெற்ற பிரான்சிஸ் கோயில்கள், சூசையப்பர் கோயில்கள், சவேரியார் கோயில்கள், முகம்மதியர் பள்ளி வாசல்கள் பெரும்பான்மை மக்களின் மதக்கோயில்களைக் குறிப்பிட்டேன். சிறுபான்மை மக்களின் மதக் கோயில்களும் உண்டு. ஒவ்வொரு கோயிலில் உள்ள விக்ரகங்களும் சிலை