பக்கம் எண் :

281

இவைகளை விட்டுக் கோதுமை சுறுசுறுப்பை உண்டாக்குகிறது என்றோ அரிசி சோம்பலை உண்டாக்குகிறதென்றோ சொல்வதில் ஒரு சிறிதும் உண்மையில்லை.

நேரு அவர்கள் நிரம்பப் படித்தவர். அவர் சொல்லை இலேசாகத் தள்ளிவிடவும் நாம் எண்ணவில்லை.

ஒருகால் கோதுமை உண்பவர்கள் அறிவாளிகளாய் இருக்கின்றார்களோ என்னமோ! அரிசியுண்ணும் தமிழரிடம் அறிவு குறைந்திருக்கின்றதோ என்னமோ - இது ஆராயத்தக்கதே.

அப்படிப் பார்த்தாலும் கோதுமை உண்ணுகின்றவர்களில் இருக்கும் அறிவாளிகளைவிட, அரிசி உண்ணுகின்றவர்களில் மிகுதியானவர் அறிவாளிகளாயிருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.

ஒரு வகையில் நேரு சொல்லில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. தமிழர் அரிசிச் சோற்றை மறந்து விட்டால் நேரு அவர்களின் முட்டாள்தனமான அறத்திற்கு அயலான நடவடிக்கைகளைத் தமிழர் எதிர்க்கமாட்டார்கள். பின்பற்றுவார்கள்; தமிழ்ப்பற்று ஒழிந்துவிடும். எதிர்ப்பாற்றல் தொலைந்து விடும் என்று கருதுகின்றாரா?

இப்படிப் பார்த்தால் நேரு சொற்களில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது.

குயில், 8-11-1960

*