பக்கம் எண் :

284

ஏழைகள் தமக்கேற்பட்ட ஏழ்மை நிலையை அவர்கள் உதறித் தள்ளச் சந்தர்ப்பம் இன்றிச் செம்மையுடையவர் தடை செய்யலாகாது. தடை செய்து மக்களைத் துன்புறுத்தலாகாது. துன்புறுத்திச் சாகடிக்கலாகாது. சாகடித்துச் சமூகத்தை இல்லாமற் பண்ணலாகாது. அப்படிச் செய்து தாமும் மண்ணாகிப் போவதற்கோ திட்டம் போடுவது? ஏழைகள் மரக்கட்டைகள் அல்லர்.

‘பண்டைப் பிரஞ்சு தேசம்’ அவள் தன் முக்காலே மூன்று வீசம் பங்கு மக்களைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தாள். பிரபுக்கள் அரச செல்வாக்குடையவர்கள். எதாச்சாரிகள். ஏழை மக்கள்மேல் ஆழ உட்கார்ந்து கொண்டனர். பேதம் - விரோதம் - பந்தம் தலைவிரித்தாடின. சமூகம் செத்துப் போகாவிட்டாலும் சாக்காட்டுக்கு ஒரு நூல் இடைவெளிதான் பாக்கி.

‘செத்துத்தான் போவதா? ’ - சாவதற்கு முன் அவர்கள் தமக்குள் இக்கேள்வியைக் கேட்டுக் கொண்டார்கள். பேதம் - விரோதம் இவைகளை விலக்கி ஒன்றுபடுவதா? இதற்கு பிராஞ்சு மக்கள் ஒத்துக் கொண்டனர். கட்டை விலக்க எழுவதா? உடனே ‘ஆம்’ என்றனர். ஏழை மக்கள் அனைவரும், அதிகாரச் செறுக்குடையவர்க்கு ஓர் இறுதிக் கடிதம் தயாரித்தனர். இதை அவர்களின் புழுங்கிய உள்ளம் கொண்டு போகியது. ஏழைகளின் இவ்வெண்ணங்களை அதிகாரங் கொண்டவர்கள் கவனிக்கவே யில்லை.

‘எமக்குள் பேதம் தீர்ந்தது! ஒப்புடையவர்களாய் விட்டோம். விரோதம் தீர்ந்தது. நாங்கள் அனைவரும் சகோதரர்; விடுதலை அடைந்தோம். இதற்குக் குறுக்கே படுக்கும் இறுக்கர்களைத் திருந்துங்கள்! உம்மை காத்துக் கொள்ளுங்கள்.’

எழுச்சியற்ற உள்ளம் இந்த நிலைக்கு ஏறியது. இந்த ஸ்ந்நத்த நிலையை ஆளுந்திமிர் பிடித்தவர்கள் புறக்கணிக்கலாமா? அவர்கள் மதம் பிடித்த நித்திரையிற் கிடந்