பக்கம் எண் :

285

தனர். வீராவேசம் ஆயினர். அவர்கள் தமது நிலையிலிருந்து மறுமுனைக்கே ஒரே அடியாய்க் குறிவைத்தனர். இடையில் நின்ற - முடி - பணம் - செறுக்கு - அட்டகாசம் தூள் தூளாய்ப் பறந்தன.

பிரெஞ்சு மக்கள் இன்ப வாழ்வில் குதித்தனர்.

மக்களின் உள்ளம் - சமத்வநிலை - சகோதரத்வ நிலை - சுதந்தர நிலை அடைய வேண்டும். வெற்றி கிடைக்கும். இன்ப வாழ்வடையலாம்.

பிரெஞ்சு தேசத்து மக்கள் தங்கள் விழி பிதுங்கும் நேரம் - ஏதுமற்று மண்ணாகப் போகும் நேரம், அதிகார கிறுக்கர்கள் - தலையில் ஏறி அழுத்தும் நேரம் - இப்படிப்பட்ட நிலையிலா அவர்கள் சமத்வ - சகோதரத்வ சுதந்திர நிலையை அடைந்தனர்? நம்ப முடியுமா?

ஆம், அந்த இம்மூன்றும் முளைத்துச் செழிப்புற ஏற்றது. அந்த நிலையில்தான் இம்மூன்றும் பிரஞ்சியர் உள்ளத்தில் ஒலித்தன. அதனால்தான் வெற்றி; அதனால்தான் இன்பம். வேறு பேச்சில்லை. நீயும் உன் உள்ளத்தும் வெளியிலும் பேதத்தை ஒழி, சமத்துவத்தை ஆக்கு! விரோதத்தை அகற்று. சகோதரத்துவத்தைக் கொள். பந்தத்தை நீக்கு! விடுதலை கொள்!

இம்மூன்று நிலையும் நீ கையை நீட்டி பெறத்தக்க பொருள்கள் என்றுகூட நினைத்திருக்கக் கூடும். மக்கள் உள்ளம் இம்மூன்று வகையான - நல்ல நிலையை அடைந்தால் இன்பம் அடைவார்கள் என்பதை பிராஞ்சியர் பழஞ்சரித்திரம் நன்றாக விளக்கிக் காட்டுகிறது.

உலகு தொடங்கிய நாள் முதல் இன்று வரைக்கும் - உருவமோ, அருவமோ, அருவுருவமோ, உண்மையோ, இன்மையோ அன்றிச் சட்ட வடிவமோ இன்னபடியென்று சககோடியில் ஒரு பகுதியேனும் - ஓரிடத்தும், ஒருவனாலும் கண்டறிந்திலாக் கடவுள் என்று சொல்லி இதில் இரண்டு