பக்கம் எண் :

286

லட்சம் ஆட்சேப சமாதானம் கிளம்பி - பாரமார்த்திகப் பேரால் பிள்ளைகள் பெண்டுகள் உறவினர் தேசத்தாரின் நிலையைக் கவனிக்காமல் நெஞ்சை உழலவிட்டு - மற்றும் அக் கடவுளுக்கு ஆயிரம் திருநாமம் சூட்டி, அதற்குக் கல்யாண குணங்கள் இந்நாள் மட்டும் தகவல் இல்லாத பொருளுக்கு கோடிக்கணக்கான பொருளைச் செலவிட்டு கோயில்கட்டி பார்த்துச் செய்ததுபோல் உருவச்சிலைகளை உண்டாக்கி அதற்கும் உமக்கும் தரகர்களை நியமித்து தரகர் மூலம் படையலிட்டு தரகுக் கூலியுடன் சொத்தைப் பறி கொடுத்து உடல் உயிர்களையும் அதற்கே தத்தம் என்று சொந்த நாட்டின் முன்னேற்றத்தில் கருத்தின்றி கிடக்கிறீர்கள். அதுவன்றி அந்தக் கடவுள் நேரில் வந்து வேதம் எழுதியதாகவும் பிற அவரைப் பலபடியாய் அவதாரம் செய்து வேதாந்தம், உபநிசத்துக்கள், இதிகாசம், புராணம் எழுதியதாகவும் சொல்லுகிறீர்கள். மேலும் அக்கடவுள் மக்களுக்கு ஏற்பாடு செய்த இத்தொல்லைகள் போதாவென்று பலபல மதங்கள் ஏற்படுத்தினதாகவும் நினைக்கிறீர்கள். இதனால் மக்களின் அறிவு விருத்திக்குப் பாடுபட வேண்டிய பண்டிதர்கள் உம்மிடம் மிகுந்த பொருளையும் பறித்துக் கொண்டு மேலும் மேலும் இத்தகைய கடவுள் பேரால் நூல் எழுதும் நிலையை உண்டாக்குகிறீர்கள். நீங்கள் மட்டுமன்றி ஆரியருடன் கலப்பற்று வாழ்ந்து வந்த பச்சைத் தமிழர் காலம் சிறிதுபோக மற்றையதான இத்தகைய நீண்ட காலமாய் நாட்டிற் பிறந்து இறந்த உங்கள் மூதாதையர்களுக்கும் இவ்வாறே நம்பிடாச் சமூகத்தை ஏதுமற்ற நிலைக்குக் கொண்டு வந்தனர். நீங்கள் இந்நாளில் கண்ணுக்கு எதிரில் உம் பழக்க வழக்கத்தின் பயனைக் கண்டு உணர்ந்தும் அதை நீக்க வேண்டும் என்பார்க்கு உமது மூதாதையர்கள் அவ்வாறு நடந்து வந்தால் சுகமாய் இருந்ததாகவும் சொல்லி விடுகின்றீர். ஔகிகம் ஒழுங்கு படாத நிலையில் உங்களைச் செல்லரித்த துரும்புகள்போல் ஆக்கி வருவதை உணராமல் வேத சம்பந்தமான வைதீகம் பேரால் இரவு பகலாய்